நாம் தமிழர் கட்சி துவங்கியதில் இருந்து, தனித்துப் போட்டியிட்டே வருகிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அக்கட்சி தனித்து நின்று, பலத்த போட்டிக்கு இடையில், 10 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றது.
கடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி மொத்தமாக, 30 லட்சத்து, 43 ஆயிரத்து 657 ஓட்டுக்களை பெற்றுள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் மட்டும், 48 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றார்.

மாதவரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகள் ஒவ்வொன்றிலும், 25 ஆயிரம் ஓட்டுக்களுக்கு கூடுதலாக, அக்கட்சிக்கு கிடைத்தது. ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேலாக, அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
அதேபோல், 14 தொகுதிகளில், 20 ஆயிரம்; 36 தொகுதிகளில் 15 ஆயிரம்; 100 தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வீதம் பெற்றுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுத்ததே, இந்த ஓட்டுக்கள் தான் என, பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் கணிசமான பங்கை, அவர்கள் கைப்பற்றி விடுவர்.
அதற்கு ஈடுசெய்ய சீமானை சேர்க்கலாம் என, தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால், லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, 2026 சட்டசபை தேர்தலுக்கும் கை கொடுக்கும் என்றும், அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.
இந்நிலையில், பழனிசாமியின் குடும்ப உறுப்பினர் ஒருவரும், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ஒருவரும் ரகசிய பேச்சு நடத்திய தகவல் தெரியவந்துள்ளது.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (34)
தப்பே இல்லை .... மூழ்கப்போகும் இரண்டு படகுகள் ஒன்று சேர்ந்தால் பெரிய வலிமையான கப்பல் ஆகி விடாது. இரண்டும் காணாமல் போவது உறுதி. இதனால் பிஜேபி தன கணக்கை தமிழ்நாட்டில் பலமாக துவங்க, ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்க ஜனநாயகம்.. தக்க பாடம் கற்ற பிறகுதான் EPS திருத்துவார் என கர்மா இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.
இதற்கு வாய்ப்பே இல்லை என மனது சொல்கிறது. சீமான் என்றுமே திராவிட கட்சியோடு கூட்டணி வைக்க மாட்டார்.
எது எப்படியோ சீமான் ஆட்சியை பிடித்தால் மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை இடி பதாக கூறியுள்ளார் அதனாலேயே அவரை தேர்ந்தெடுக்கலாம்
இது என்னவோ எடப்பாடி கே பழனிசாமியின் எதிர் தரப்பினர் கிளப்பிவிடும் அப்பட்டமான புரளி என்றே தோன்றுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை சேதப்படுத்த திமுகவால் ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்படுபவர்சைமன் செபஸ்டியன் என்கிற சீமான். கிட்டத்தட்ட 18 சதவிகித மைனாரிட்டி வாக்குகளை கொண்ட தமிழகத்தில் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாக்கெட் செய்வது திமுக. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக பூச்சாண்டியை காட்டி காட்டி பள்ளிவாசல்கள், பாதிரியார்கள் மூலம் லம்பாக திமுகவினர் தட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். ஆனால் ஹிந்துவாக்குகள் என்று வரும்போது இயற்கையாகவே பெரும்பகுதி அதிமுகவுக்கு சென்றுவிடுகிறது அதை தடுக்காமல் திமுகவால் ஒருக்காலும் வெல்ல முடியாது. அதற்குத்தான் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு கால் சதவிகித கிருஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் க்ரிப்டோ கிருஸ்தவர்கள் வாக்குகள் கூட விழாது. அவர் டேமேஜ் செய்வது முழுக்க அதிமுகவுக்கு விழும் வாக்குகளை அதாவது அதிமுக மீதுள்ள எதிர்ப்பு வாக்குகளை. சீமானை கூட்டணிக்குள் வைத்துக்கொள்வதால் அதிமுகவுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது போல அது. சசிகலா டிடிவி.தினகரனையே தடம் தெரியாமல் காலி பண்ணிவிட்டு இப்போ ஓபிஎஸ்ஸை கதறவிட்டுக்கொண்டு இருக்கும் எடப்பாடியார் அதாவது எடப்பாடி கே பழனிச்சாமியின் பின்னாலிருக்கும் கொங்கு லாபி இந்த சீமான் வேல்முருகன் கமல்ஹாசன், சரத்குமாரையேல்லாம் கண்டுக்கவே மாட்டார்கள். அதிமுக திமுக என்ற சிங்கம் புலிகள் வேட்டைக்கு பின் அந்த இடத்தில் இருக்கும் மிச்சம் மீதிக்கு ஓநாய்கள் வருவது போல வரத்தான் செய்யும். எடப்பாடியின் தற்போதைய டார்கெட் எதிரிகள் அல்ல, சக போட்டியாளர்கள் அல்ல, துரோகிகள் கூட இருந்தே குழி பறித்த குழி பறிக்கும் துரோகிகள். அதை அதிமுக தொண்டர்களிடம் அவர் சரியான நேரத்தில் சரியானபடி அடையாளம் காட்டிவிட்டார். இந்த சட்டப்போராட்டம் முடிந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனவுடன் அவர் மதுரையில் ஒரு மாபெரும் மாநாடு நடத்தி மக்கள் மத்தியில் இனி எந்த காலத்திலும் பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூப்ட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையே எங்கள் கொள்கை என்று ஒரு போடு போட்டால் போதும், மறு நொடியே திமுக சுக்கல் சுக்களாக சிதற ஆரம்பித்துவிடும். பாஜக காங்கிரஸ் கூடாரம் கும்பல் கும்பலாக காலியாகும். அதிமுக தனக்கான தலைமையை தானே தேடிக்கொள்ளும். இப்போது அது எடப்பாடி கே பழனிசாமி. எதிர்காலத்தில் வேறு ஒருவரை அடையாளம் காட்டும். அவர் இப்போது எங்காவது ஒரு கிராமத்தில் வார்டு கவுன்சிலராக இருப்பார். எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அதிமுக வின் எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட்.
அம்மா இல்லாத அதிமுக ஒரு வெத்துவேட்டு. அதிமுக ஓட்டுக்கள் எல்லாம் அண்ணாமலைக்கு போகும். வரும் தேர்தலில் அக்கட்சி மூன்றாம் அல்லது நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு, சீமான் கட்சி போலயே ஆகிவிடும். கூட்டணி அமைப்பது பொருத்தமாக இருக்கும்