புதுடில்லி: 'மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, எந்தவிதமான 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, சில ஊழியர் அமைப்புகள் சார்பில் நாடு முழுதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டிரைக்கில் ஈடுபடுவதற்கு, ஊழியர்களுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வமான அனுமதியும் இல்லை. உச்ச நீதிமன்றமும் இது தொடர்பாக ஏற்கனவே பல தீர்ப்புகளை அளித்துள்ளது.

எனவே போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்ட எந்த வகையான போராட்டத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழியர்களின் போராட்டம், விடுப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகள் உடனுக்குடன் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (9)
எலக்ஷன் வர்ர வரைக்கும்.இதே மாதிரி உதார் உடுவாங்க.
அரசை நடத்தத்தான் அரசு ஊழியர்கள் இப்போ அரசு ஊழியருக்கு ஊதியம் அளிக்க அரசு நடக்கிறது. இதில் பழைய ஓய்வூதிய திட்டம் எல்லாம் சாதாரண மக்கள் மீது வரிசுமையை அதிகரிக்கும் . வறுமைக்கோடு 32.50.ரூபாய் அதைவிட 3000./4000. மடங்கு ஊதியம் எதை வய்த்து முடிவு செய்கிறார்கள் ஊதிய உச்சவரம்பு வறுமை கோட்டின் மடக்கில் அளவிடப்படவேண்டும். இல்லா விட்டால் வெள்ளைக்காரன் போல் மக்களை வருத்தி அரசு ஊழியர் வசதிகளை குவிக்க வலி செய்துவிடும்
வேலை இல்லா பட்டதாரிகளை பயிற்சி கொடுக்க வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எடுக்க கூடாது நேரடி தேர்வு நடத்திதான் எடுக்க வேண்டும்.முதலில் வேலை கிடைத்தால் போதும் என்பார்கள் வேலை கிடைத்ததும் ஊதியம் பத்தவில்லை என்பார்கள் இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.வேளையில் சேர்க்கும் போதே இதுதான் ஊதியம் என்று அறிவித்துவிடவேண்டும் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்ற சட்டத்தை நிறைவேற்றிவிடவேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலை நீக்கம் செய்துவிட வேண்டியதுதான். சட்டத்தை கடுமையாக்கினால் போதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டார்கள்.
நண்டு கொழுத்தா வலையில் தங்காது ..
முதலில் தற்காலிக் பணி, பிறகு பணி நிரந்தரம் வேண்டி போராட்டம், பிறகு அவ்வப்போது சம்பள உயர்வு கேட்டுப்போராட்டம், பிறகு D A உயர்வு கேட்டு போராட்டம், பிறகு சனிக்கிழமை & ஞாயிற்றுகிழமை விடுமுறை கேட்டுப்போராட்டம், பதவி உயர்வு கேட்டு போராட்டம், ஓய்வூதியம் கேட்டு போராட்டம், பணிக்கொடை கேட்டு போராட்டம், ஓய்வுக்கு பிறகு வாரிசுகளுக்கு பணி கேட்டு போராட்டம்.... அரசு ஊழியர் என்றால் போராடுவதற்கு மட்டுமே சம்பளம். அதிகாரத்தில் இருந்து சம்பளம் / கிம்பளம் வாங்கி வாழ்ந்த குடும்பம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக வாழவேண்டும் - என்னை போன்று வரி கட்டுப்பவர்கள் வரி கட்டியே சாகவேண்டும். இதற்கெல்லாம் ஆளும் அரசுகளே காரணம். இதற்கு மருந்து இரண்டு முதல்வர்களிடம் மட்டுமே இருந்தது : எம் ஜி ஆர் - போராட்ட நேரங்களில் மக்கள் பார்த்து கொள்வார்கள் என்பார். அடுத்து ஜெயலலிதா : போராடிய அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பினார்... புரையோடிய புண்ணை ஆபரேஷன் செய்துதான் அகற்றவேண்டும்..