கொழும்பு கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, அதன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்புதலை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் வழங்கி உள்ளது.
போராட்டம்
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டியது.

இதனால் அந்நாட்டு மக்கள் அவதி அடைந்தனர். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே குடும்ப ஆட்சி தான் காரணம் எனக் கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடினார். பின், அதிபர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இலங்கையின் எட்டாவது அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீண்டபாடில்லை.
வரவேற்பு
இந்நிலையில், கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்புதலை, ஐ.எம்.எப்., வழங்கி உள்ளது. இதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இலங்கை வரலாற்றில் இது ஒரு மைல்கல். ஐ.எம்.எப்., கடனுதவி பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் உதவும். இனி இலங்கை பொருளாதாரத்தில் திவாலாகாது என்ற நம்பிக்கை உள்ளது. அன்னிய செலாவணி அதிகரித்து பொருளாதாரம் மேம்படும். இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆதரவளித்த ஐ.எம்.எப்., மற்றும் சர்வதேச கூட்டாளிகளுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
நன்றி இலக்கத்தவர்களுக்கு மீண்டும், மீண்டும் உதவுவது தவறு. இப்போ சீனாவுக்கு அடுத்து, அமெரிக்காவும் இலங்கையில் கால்ஊண்டுகிறது, இரவுகளில் பல விமானங்களில் பலதொகை ஆயுதங்கள் இலங்கையில்அமெரிக்கா விமானங்களில் வந்து இறக்கப்டுகிறது. சீனாவுடன் அமரிக்காவுக்கு முரண்பாடுவந்தால், இலங்கையை அமெரிக்கா ஒரு இராணுவ தலமாக பவிக்கும், இது இந்திய இறையாண்மைக்கு சவாலாகும் என்று பல ஆய்வாளர்கள், உண்மையின் நிதர்சனம் என்ற இணையதளத்தில் சொல்கிறார்கள். இப்படி பணம் கொடுத்தால் இலங்கை இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்போதைய இலங்கை ஜனாதிபதிக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட நட்பு அவரின் மாமா காலத்தில் இருந்தே வந்தது,
இலங்கைக்குத்தேவை பணம் இல்லை, ஒரு நல்ல நிர்வாகி. அதை மத்திய அரசால் கொடுக்கமுடியும். இலங்கை தங்கள் அரசை ஒரு ஐந்து வருடங்கள் பாஜக அரசியல்வாதிகளை விட்டு நடத்தச் சொன்னால், எல்லாம் சரியாகிவிடும். செய்வார்களா?
இங்கே பாஞ்சிலட்சம் தரேன்னு சொல்லி எட்டு வருஷத்துக்கு மேலாச்சு. இலங்கைக்கு உடனடி உதவி. நமக்கு முன்னாடி அவிங்களுக்கு பாஞ்சி லட்சம் கிடைச்சுரும் போலிருக்கே. குடுத்து வெச்சவங்க.