ADVERTISEMENT
புதுடில்லி: எதிர்க்கட்சி கடும் அமளி காரணமாக, நேற்று (மார்ச் 21) பார்லி., இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி கேட்டு காங். எம்.பி., ராகுல் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடாமல், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லி., இரு அவைகளும் தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பதில் உரையாற்ற அனுமதி கேட்டு காங்.எம்.பி., ராகுல், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதிள்ளார்.
வாசகர் கருத்து (9)
தம்பி வாயைத் திறக்காத வரை தம்பிக்கும் நல்லது - காங்-கம்பெனிக்கும் நல்லது -
சபையை நடத்த விட்டால்தான் பேச முடியும்.கடவுள் என்று ஒன்று இருந்தால் உங்களுக்கெல்லாம் நல்ல...
அயல்நாட்டில் இந்தியாவை பற்றி பேசிவிட்டு, பாராளுமன்றதுக்குள்ள வந்ததே தப்பு...இதுல கடிதம் வேற எழுதுதிரியா?... உன்னை இந்தியாவிற்குள் நுழையவிட்டதே தப்பு தம்பி...
அனுமதி பெற்றுத்தான் லண்டனில் போய் உக்காந்துகிட்டு உலக நாடுகள் எல்லாம் இந்தியாவில் வந்து மூக்கை நுழைக்க சொன்னாராக்கும்? நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு எடுத்துச்சென்று இன்று அதை தீர்க்க முடியாத ஒன்றாக ஆக்கினார். இப்போது இவர் பங்கிற்கு உலக நாடுகள் இந்தியாவை கட்டுபடுத்த வேண்டும் என்று வாந்தி எடுத்துவிட்டு வந்திருக்கிறார். இரண்டுமே வடிகட்டிய சுயநலம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உளறு உளறு என்று உளறி அனைத்தும் பொய்யாக பேசப்போகிறார். இந்த ஆள் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன கேட்டுவிடப் போகிறது.