இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல், மின் வாரியத்தின் எண்ணுார் அனல் மின் திட்ட ஒப்பந்தம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு கொள்முதல் போன்றவற்றில் நடந்த முறைகேடு தொடர்பாக, அண்ணாமலை ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தார்.
முதல்வர் குடும்பத்தினரின் துபாய் பயணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு தொடர்பாகவும், பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, சந்தேகங்களை எழுப்பினார்.

கர்நாடகாவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அம்மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, அங்கு தேர்தல் பணியாற்றி வருகிறார். இதனால், திட்டமிட்டபடி அவரின் பாதயாத்திரை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம், அண்ணா மலை அறிவித்தபடி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அமைச்சர்கள் எங்கெங்கு சொத்துக்களை வாங்கியுள்ளனர், முதலீடு செய்துள்ளனர் என்ற விபரங்கள், தமிழக பா.ஜ., இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுவரை பா.ஜ., சேகரித்த தகவல்களின்படி, 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் வாங்கி இருப்பதாக தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து (7)
புலி வருது, புலி வருது அண்ணாமலை அவர்களின் புலி வருது.மியாவ், மியாவ்!
இந்நேரம் திமுகவின் சட்டப்பிரிவு கோர்ட் படிகளில் ஏறி பலரை முறையாக கவனித்து இந்த ஊழல் பட்டியல் வெளியிட தடை பெற்றிருக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். பல அமைச்சர்களின் தூக்கம் போயிருக்கும்..இதனை எண்ணி எண்ணி ஸ்டாலினும்த்தூக்கம் தொலைத்திருப்பாரே. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் விரைவில் வெளியிட கூடும். தமிழகத்தின் கடன் சுமார் ஏழு லட்சம் கோடி என்கிற செய்தியை படிக்கும்போது இந்த கழகங்களின் சொத்துப்பட்டியலில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை இருக்க கூடும் என்கிறது கமலாலய வட்டாரங்கள். அந்த அளவுக்கு ஊழல் செய்து பெரிய அளவுக்கு சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர். கோவில் நகைகளை கணக்கெடுத்தால் அது இன்னும் கூடும் என்கிறது செய்திகள். கோவில் நிலங்களும் அந்த அளவுக்கு கழக கண்மணிகளால் சுருட்டப்பட்டுள்ளது என்பது கூட அதிர்ச்சி தகவலாக இருக்கும். தடை கோராமல் இருக்க மாட்டார்கள் இந்த புனிதர்கள்..பொறுத்திருந்து படிப்போம் பரப்புவோம்..மக்கள் இந்த முறை திருந்தால் போகமாட்டார்கள் என்று உறுதிப்பட நம்புவோம்..
பா.ஜ., சேகரித்த தகவல்களின்படி, 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து குவிப்பு .....பெரும் கொள்ளைக்கூட்டக்கார தி மு க திராவிட கும்பல் இது ..இவனுக்கெல்லாம் சமூக நீதி ஒரு கேடு ...கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு கொள்முதலில் கூட முறைகேடு.....கொஞ்சம் கூட தயங்காத இரக்கமில்லாத கூட்டம் ...மொத்த விபரங்கள், தமிழக பா.ஜ., இணையதளத்தில் வெளியிடப்படும்....இதெல்லாம் அண்ணாமலையால் மட்டுமே சாத்தியம் ...
எனக்கென்னமோ அண்ணாமலையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. திமுக வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர மிரட்டுவது மாதிரிதான் தோன்றுகிறது.
ஏற்கனவே தூங்க ்முடியாம இருக்கும் ஸ்டாலினை நிரந்தரமா தூங்க முடியாம செய்திராதிங்க அண்ணாமலை.