Load Image
Advertisement

லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்., பணி நீக்கம்

Ins. woman caught in bribery complaint, sacked    லஞ்ச புகாரில் சிக்கிய  பெண் இன்ஸ்., பணி நீக்கம்
ADVERTISEMENT
பள்ளிக்கரணை,: பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராணி, 43.

இவர் போக்குவரத்து விபத்துகள் நடக்கும் போதும், அது குறித்து விசாரணை நடத்த செல்லும் போதும், தனக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை அழைத்து சென்றார்.

அந்த வழக்கறிஞர்கள் வாயிலாக, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடாக கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது.

இதில் முரண்படுவோரை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிலர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நடத்திய விசாரணையில், இன்ஸ்பெக்டர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணியை பணியிடை நீக்கம் செய்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் காமினி தலைமையில், ஏழு மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆய்வாளர் ராணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (27)

  • Vasanth Kumar - Chennai,இந்தியா

    வாழ்த்துக்கள் அமல்ராஜ் சார்

  • அமராவதிபுதூர் பிரேம்நாத், LONDON. - Milan,யுனைடெட் கிங்டம்

    மிக்க மகிழ்ச்சி. இது போன்ற நடவடிக்கைகள் லஞ்சத்தை ஒழிக்கும்.

  • DVRR - Kolkata,இந்தியா

    ஆணுக்கு பெண் சமம் அப்படித்தானே?????

  • Sivak - Chennai,இந்தியா

    ஆஹா டிஸ்மிஸ் ஓகே தண்டனை எதுவும் இல்லையா? ஆண்களுக்கு பெண்கள் சமம் ஆயிட்டாங்க இதுக்கு தானே சம உரிமை சம உரிமைன்னு ஒப்பாரி வெச்சிட்டு இருந்தாங்க.. பெண் போலீஸ்க்கு, ஏழு மணிக்கு பதிலா எட்டு மணிக்கு வரலாம் ஏன்?? பெண்களுக்கு டூட்டிக்கு வந்தவுடன் டிபன் காபி இலவசம் குடுங்க ...டூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது இரவு சாப்பாடு இலவசம் குடுங்க ... இலவச குழந்தைகள் காப்பகம்... ஆறு மாசத்துக்கு ஒரு முறை ஒரு மாசம் லீவு ... ஒரு டிவி கட்டில் போட்டு குடுங்க .. வேலைக்கு நடுவுல ஓய்வு எடுக்க ... வேற ஏதாவது இலவசம் ஏதாவது இருந்தா குடுங்க ... இதுக்கு மேல சம்பளம், கிம்பளம் , லஞ்சம், கமிஷன்.. அப்புறம் ஏன் போலீஸ் வேலைக்கு போகணும்னு ஏன் குதிக்க மாட்டாங்க ... கடைசில திமுக காரன் இடுப்பை கிள்ளிட்டான்னு இந்த பொம்பளை போலீசை பாதுகாக்க ரெண்டு ஆம்பளை போலீஸ் .. விளங்கிடும் ... ஆம்பளை போலிஸுக்கு பிம்பிளிக்கி பிளாப்பி ...

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    தயவு செய்து இதே போல் யார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அரசு துறையில் இருந்து பணிநீக்கம் செய்யுங்கள். அப்பொழுது தான் தவறு செய்ப்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கும். நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு பாராட்டுக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement