அமைதியை குலைத்தால் கடும் நடவடிக்கை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எச்சரிக்கை
சண்டிகர்: அந்நிய சக்திகளின் உதவியுடன், பஞ்சாப்பில் அமைதியை குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சண்டிகர்-பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளரும், மத பயங்கரவாத பிரசாரகருமான அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக மொகா, சங்ரூர், மொஹாலி உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் வரை மொபைல் போன் வழியான இணையதள, எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட அறிக்கை: அந்நிய சக்திகளின் உதவியுடன் பஞ்சாப்பின் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கடந்த சில நாட்களாக சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்படும்.

அமைதியை குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது குழந்தைகளுக்கு தேவை புத்தகங்கள்; ஆயுதங்கள் அல்ல. இவ்வாறு கடுமையாக பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சட்டம் ஒழுங்கை சரியாக கடைப்பிடித்ததற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை வாழ்த்துகிறேன். சட்டம் ஒழுங்கை பஞ்சாப் அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
வீட்டிற்குள் பயங்கரவாதிகளை பதுக்கி இருந்தால் வெளியே விடுங்கள் அன்பரே? என்னா நடிப்புடா சாமி.
நித்திரை கலைந்தது
டோல் கேட்டில் அம்ரிட்பாலை வெளியே விட்டது யாரு, எப்புடீன்னு ஒமக்கு சத்தியமா தெரியாது?குடியை நிறுத்தி விட்டு நிதானத்தில் பேசுறாயா என்ன? நீங்களும் உங்க கட்சியும் ஆட்சியப் பிடித்ததே காலிஸ்தான் காரனுங்களோட கூட்டு வச்சு தானய்யா? இப்போ ரொம்ப நல்லவர் மாதிரி எச்சரிக்கை விடுறே? கேஜ்ரிவால் மிகப் பெரிய பேராபத்தை நாட்டுக்கு உருவாக்கி விட்டார்++++அவர் ரொம்ப ஆபத்தானவர்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதலில் அதிகம் குடிப்பதை நிறுத்தவேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், மக்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் மான் மீது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆம் ஆத்மி இனி காலிஸ்தான் பிடியிலிருந்து மீள்வது கடினமாம். கெஜ்ரி இப்போது அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் தான் என்கிறார்கள்+ காலிஸ்தானின் குரலாகத் தான் ஆம் ஆத்மியின் குரலும், அவர்கள் வகுத்துக் கொடுத்ததாகவே தான் அக்கட்சியின் செயல் பாடும் இனி இருக்குமாம்+ கெஜ்வால் இப்போது நாடு எதிர்கொள்ளும் ஒரு மிகப் பெரிய ஒயிட் காலர் ஆபத்து என்கிறார்கள். அந்நிய சக்திகளின் ஏஜெண்டு என்று சிலர் அடித்த்து பேசுகிறார்கள்.விசாரணை தேவையாம். அதே போல சமீபத்தில் தடை செய்யப் பட்ட ஒரு மதவாத அமைப்பின் குரலாகவே தமிழகத்த்தின் அந்த அடங்காத லோக்கல் கட்சி நாடாளு மன்றத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதும் , செயல்பட்டுக் கொண்டிருப்பதும் நாட்டை அச்சுறுத்தும் மிகப் பெரிய ஆபத்து என்றும் பேசிக் கொள்கிறார்கள்.