மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி அதிருப்தி

அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்சபையில் அறிவிக்கப்பட்டது. தேர்தலின்போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி, தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இத்திட்டத்துக்கு, 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சரிபாதி குடும்பத் தலைவிகளுக்கு, 1,000 உரிமைத்தொகை கிடைக்காது. இது நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கென தனி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
திருக்கோவில் நிலத்தில், திருக்கோவில் நிதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் துவங்கிய பள்ளிகளில், ஹிந்து சமய கல்வி இருக்க வேண்டும். மற்ற மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில், அந்தந்த மதங்களில் பிரார்த்தனை பாடல்களுடன் பள்ளிகள் துவங்குகின்றன.
அதுபோல, ஹிந்து கோவில் நிதியில் துவங்கப்பட்ட பள்ளிகளில், ஹிந்து சமய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.

பத்திரப் பதிவு, சொத்து வரி என, தமிழகத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனாலும், நிதி, வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக, அரசு திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது தெரிகிறது. 2023--24-ல் தமிழக அரசு, 1 லட்சத்து 43 ஆயிரத்து 197 கோடியே 93 லட்சம் அளவுக்கு மொத்த கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், இதனால், அடுத்த நிதியாண்டில், தமிழக அரசின் மொத்த கடன் , 7 லட்சத்து 26 ஆயிரத்து 28 கோடியே 83 லட்சமாக இருக்கும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
கடன்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். அதை தி.மு.க., அரசு செய்யவில்லை. மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்டை தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (27)
மெட்ரோ பணிகளுக்கு செலவிடப்படும் தொகையினை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். (தரமான சாலைகள், அரசு பள்ளி கட்டிடங்கள், உயர் தர வசதிகள் கொண்ட மருத்துவ மனைகள் போன்ற)
மொத்தம் 2,18,00,000 குடும்பத்திற்கு குடும்ப அட்டை உள்ளது. இதில் குடும்ப தலைவர் என்ற இடத்தில் பெண்ணின் படமும் அவரின் பெயரும் இருக்கும். கிட்டத்தட்ட 25,00,000 பெண்கள் குடும்ப தலைவர் இருப்பதாக (குத்து மதிப்பாக) வைத்துக்கொண்டால், அரசிற்கு மாதம் 250 கோடி (வருடத்திற்கு 3000 கோடி செலவாகும்). மாதம் ஆயிரம் ரூபாய் கொடு என்று எந்த குடும்ப பெண்களும் (தேர்தலுக்கு முன்) கேட்கவில்லை. ஆட்சிக்கு வர, அரசியல் காட்சிகள், எத்தகைய வாக்குறுதிகளும் கொடுக்கலாம் என்று இருப்பதை மாற்றாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். ஏற்கனவே போக்குவரத்து கழகம், மின்சார துறை என்று அரசின் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனை செம்மை படுத்தாமல் இலவசத்திற்கு மேல் இலவசம் என்று போய்க்கொண்டிருந்தால் எப்படி? இது அனைத்தும் வரி செலுத்துவோருக்கு இன்னும் கூடுதல் சுமை அன்றோ? இதனை ஈடுகட்ட சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார பில், ஆவின் பொருட்கள் என்று அனைத்திலும் (TASMACC சரக்கு உட்பட) விலை உயர்த்திவிடுவார்கள். இதற்கு பதில் பெண்கள் மேம்பாட்டிற்கான பல திட்டங்களை உருவாக்கலாம், இலவச ட்ரைனிங் சென்டர் (தையல், னிட்டிங், எம்பிராய்டரி போன்ற) நடத்தி அவர்களுக்கு வங்கி மூலம் லோன் கிடைக்க செய்து பெண்களின் வாழ்வை வளமாக்கலாம். மந்திரிகளுக்கு அதிகாரிகள் இடித்துரைக்க வேண்டாம், எடுத்துரைத்தாலே போதும்.
கடன்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதுதான் சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்.-வானதி. தனக்கு போக தான் தானம் என்பார்கள். பெண்கள் பணம் இல்லைனு கஷ்டப்படுகிறார் என்று இவர் காதில் விழுந்து எம்ஜியார் திரைப்படத்தில் வருவது மாதிரி இப்படி அவர்கள் கஷ்டத்தை ஆபத்பஆந்தவன் அனாத ரக்ஷகன் மாதிரி களைய முயற்சித்தால் எப்படி கடனை அடைப்பது?...இனிமேல் தேர்தல் நேரங்களில் எல்லாம் பெண்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அதான் அதான் மாசம் வாங்குறீங்களே ...யாரு கொடுத்தது தளபதி கொடுத்தது என்று பொண்ணுமுடி சொல்ல ஏதுவா இருக்கும். பெண்களுக்கு மாசா மாசம் பணம் கொடுப்பதே தேர்தலில் நிரந்தரமா வாக்குகளை பெற தான் என்று தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டால் அதுவும் தமிழ் சமுதாயத்துக்கு உதவியா இருக்கும்.
MLAங்கரதவி இருக்கரதால ஏதாவது உளரனும்னுதான் இது உளருது.
மத்திய பட்ஜெட்டில் வரியம்மா சூப்பரா அல்வாவைக் கிண்டிக் கொடுத்தாங்க , அது மாதிரி இவரும் சூப்பரா அல்வாவைக் கிண்டிக் கொடுத்துட்டாரு....