பெண்களை நிர்வாணப்படுத்தி படம் எடுத்த பாதிரியார் கைது: எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தவில்லை என வாக்குமூலம்
நாகர்கோவில் -கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பிரார்த்தனைக்கு வந்த பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து தலைமறைவான பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 29, போலீசார் கைது செய்தனர். எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தவில்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பேச்சிப்பாறையில் பணிபுரிந்த போது அப்பகுதியை சேர்ந்த தற்போது பெங்களூரில் நர்சிங் படிக்கும் மாணவி ஒருவர் பிரார்த்தனைக்கு சென்றார். பெனடிக் ஆன்றோ மாணவியை தவறான இடங்களில் தொட்டு பேசியுள்ளார். பின் அவரது அந்தரங்க உறுப்புகளை படம் எடுத்து அவரது வாட்ஸ்ஆப்புக்கு அனுப்பினார். மாணவி கொடுத்த புகார் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.
தலைமறைவான பாதிரியார்
இந்நிலையில் அழகியமண்டபம் சர்ச்சில் பணிபுரிந்த போது ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கேட்க சென்ற சிலருடன் பாதிரியாருக்கு மோதல் ஏற்பட்டது. பாதிரியாரின் லேப்டாப்பை அவர்கள் பறித்து சென்றனர். இதுதொடர்பாக தனியார் சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜயோ கைது செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு பின் பாதிரியார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வைரலானது. இதில் பெண்ணின் நிர்வாண படங்களும் அடங்கும். இதையடுத்து பாதிரியார் தலைமறைவானார். பேச்சிப்பாறை மாணவி கொடுத்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
யாரையும் கட்டாயப்படுத்தவில்லை
நேற்று அதிகாலை தமிழக கேரள எல்லை கொல்லங்கோடு அருகே பாதிரியார் கைது செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் விசாரித்த போது பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. நான் யாரையும் கட்டாயப்படுத்தி படம் எடுக்கவில்லை, யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை என கூறியுள்ளார். இளம் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு தலைகுனிந்தபடி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிரியாரின் அலைபேசியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
பாதிரியார் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்டது சாமியாரா... இல்லை.... பாதிரியாருங்க ... அப்போ கண்டுக்காம போயிருவோம் ....... தமிழக RSB மீடியாக்கள்