ADVERTISEMENT
பொங்கலுார்:கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலுார் தாயம் பாளையம் அருகே விரிசல் ஏற்பட்டுள்ளது. நுாறடி நீளத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்து அபாயம் உள்ளது. ரோடு விரிவாக்கம் செய்த போது ஏற்கனவே இருந்த கிணற்றை மூடி ரோடு போட்டதால் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது. அதை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!