Load Image
Advertisement

2 கி.மீ., துாரத்தை கடக்க அரை மணி நேரம் ஆக்கிரமிப்புகளால் ஸ்தம்பிக்கும் சாலை



முகப்பேர்: அம்பத்துார் தொழிற்பேட்டை சாலை, -முகப்பேர் கலெக்டர் நகர் சந்திப்பில் இருந்து, முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம், 2 கி.மீ., துாரம் தான்.

பாரி சாலை, வளையாபதி சாலை ஆகியவற்றின் வழியாக, மேற்கண்ட நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் சென்று வருகின்றன.

முகப்பேர் கிழக்கில் இருந்து, பிராட்வே, தி.நகர், அண்ணா சதுக்கம் ஆகியவற்றுக்கு, '7எச், 147ஏ, 40என்' ஆகிய, வழித்தட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முகப்பேர் சுற்று வட்டாரங்களில் இருந்து, மேற்கண்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், மாநகர பேருந்துகளையே நம்பி உள்ளனர்.

அவர்கள், காலையில் குறித்த நேரத்தில் அலுவலகம், மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

பாரி சாலை, வளையாபதி சாலை முழுக்க, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நெரிசல் அதிகரித்து மேற்கண்ட 2 கி.மீ., துாரத்தை கடக்க, மாநகர பேருந்துகளுக்கு அரை மணி நேரமாகின்றன.

இப்பகுதிகளில், பிரபலமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவற்றுக்கு வந்து செல்லும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர கால சேவை வாகனங்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.

இந்த பிரச்னை குறித்து, மாநகர போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொது போக்குவரத்துகள் குறித்த நேரத்தில் கடந்து செல்ல, உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement