ADVERTISEMENT
கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில், மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர்.
நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின், 25வது ஆண்டு விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் மாணவர்கள் 'ஏ', 'பி', 'சி', 'டி' என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகளும், கபடி, டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
போட்டிகளில் திறம்பட செயல்பட்ட 'ஏ' அணியினர் 110 புள்ளிகள் எடுத்து, ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை தட்டிச் சென்றனர். 'சி' அணி மாணவர்கள் 96 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பீளமேடு போலீஸ் ஆய்வாளர் மாரிமுத்து கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கல்லுாரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி, உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி மற்றும் துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!