நாளை விவசாயிகள் பால் காய்ச்சும் போராட்டம்
திருப்பூர்:பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, ஆவின் அலுவலகம் முன், நாளை (21ம் தேதி) பால் காய்ச்சும் போராட்டம் நடத்துவதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பால் உற்பத்தியாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் போதெல்லாம், கறந்த பாலை ரோட்டில் ஊற்றி, அரசு கவனத்தை ஈர்ப்பது வழக்கம். பால் உற்பத்தியாளர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ள விவசாயிகள் சங்கம், முற்றிலும் மாறுபட்ட வகையில், பால் காய்ச்சும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
எவ்வித மூலதனமும் இல்லாம், பூமியில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கால்நடை தீவனம், பராமரிப்பு என, பல்வேறு நெருக்கடியில் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்பது, விவசாயிகளின் குற்றச்சாட்டு.
தற்போதைய விலைவாசி அடிப்படையில், பசும்பால் லிட்டருக்கு, 60 ரூபாயும், எருமைப்பாலுக்கு, 75 ரூபாயும் கொள்முதல் விலையாக அறிவித்தால் மட்டுமே, குறைந்தபட்ச லாபம் கிடைக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி, பால் காய்ச்சும் போராட்டத்தை, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் நடக்கும் பால் உற்பத்தியாளர் போராட்டத்தை ஆதரித்தும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தியும், 21ம் தேதி, பால் காய்ச்சும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி ஆவின் அலுவலகம் முன்பாக, பால் காய்ச்சும் போராட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!