கிராம சபை கூட்டம் மதச்சார்புள்ள இடத்தில் நடத்த கூடாது: ஊரக வளர்ச்சி துறை அறிவுரை
அன்னூர்:'மதச்சார்புள்ள இடத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தக் கூடாது,' என ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு வரை ஊராட்சிகளில், ஜன., 26, மே 1, ஆக., 15, அக்., 2 ஆகிய நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
இதன்படி மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்திடக்கூடாது. கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் கோவில் மைதானத்தில் தான் கிராமசபை கூட்டங்கள் இது வரை நடத்தப்பட்டு வந்தன. அரசின் இந்த புதிய உத்தரவால் பல கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் பள்ளி மைதானத்துக்கும் வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டு வருகிறது. மார்ச் 22ம் தேதி யுகாதி தினம் அரசு விடுமுறை என்பதால், அன்று பள்ளிகளுக்கு விடுமுறை. இதனால், அன்று பள்ளி மைதானங்களில் கிராம சபை கூட்டம் நடத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
'இதுவரை 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கிராம சபை கூட்டம் அரசின் புதிய உத்தரவால் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது,' என ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!