ADVERTISEMENT
மேட்டுப்பாளையம்:காரமடையில் லாரி மீது மோதி ஆண் மயில் இறந்தது.
காரமடை மாரியாபுரம் அருகே தனியார் கம்பெனி ஒன்று பல ஆண்டுகளாக மூடியுள்ளது. இக்கம்பெனியில் ஏராளமான மயில்கள் வாழ்கின்றன. இந்த மயில்கள் அவ்வப்போது வெளியே பறந்து சென்று, இரை தேடி வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று காலை, கம்பெனியிலிருந்து பறந்து வந்த ஆண் மயில், காரமடை ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல முயன்றது. அப்போது மேம்பாலம் வழியாக வந்த லாரி மீது, மயில் மோதியது. இதில் கீழே விழுந்த மயில் தலை, கால்களில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள், உயிருக்கு போராடிய மயிலை மீட்டு, காரமடை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த வனத்துறையினர், மயில் இறந்து விட்டது என, கூறினர்.
இது குறித்து காரமடை வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' காரமடை மாரியாபுரம் பகுதியில் மயில்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
எனவே காரமடை கோவை சாலையில் வாகனங்கள் மெதுவாகவும், மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!