பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு
குன்னுார்:குன்னுார் வருவாய் துறை சார்பில் நடத்திய வாகன சோதனையில், தடை செய்த 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பேப்பர் கப் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி கடந்த, 2 நாட்களாக தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க, குன்னுார் பகுதிகளில், ஆர்.டி.ஓ., பூஷண் குமார் தலைமையில், தாசில்தார் சிவக்குமார், மண்டல துணை தாசில்தார்கள் முனீஷ்வரன், சீனிவாசன் ஆகியோர் சோதனை நடத்தினர்.
அதில், 32 வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் கப்கள் பறிமுதல் செய்து தலா, 500 ரூபாய் வீதம், 16 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. முன்னதாக, குன்னுார் டபுள் ரோடு பகுதியில் நடத்திய சோதனையில் சினிமா படப்பிடிப்பு குழுவின் வாகனத்தில் இருந்து, 12 வாட்டர் பாட்டில்கள் அடங்கிய, 4 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, கல்லாறு பசுமை வரி சோதனை சாவடியில் தணிக்கை மேற்கொண்டு, சுற்றுலா வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!