உழவர் உற்பத்தியாளர் கூட்டம்
உத்திரமேரூர்: வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை திட்டத்தின் சார்பில் விவசாயிகளை ஒருங்கிணைத்து 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், சாகுபடியில் தொழில்நுட்பம், பண்ணை கருவிகள் மற்றும் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கல், மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்கள், விற்பனை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் மத்திய, மாநில அரசால் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து நிறுவனம் துவக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சாலவாக்கம் மற்றும் அரும்புலியூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளை இணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்க சாலவாக்கத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சாலவாக்கம், எடமச்சி, இடையாம்புதுார், ஆலப்பாக்கம், திருமுக்கூடல், மதுார், சீத்தாவரம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்..எல்.ஏ., சுந்தர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!