ADVERTISEMENT
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சிக்குட்பட்டது வி.ஜி.கே.புரம் கிராமம்.
இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
தற்போது அங்கன்வாடி மையத்தின் கூரை சேதமடைந்து கம்பிகள், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன.
இதனால் மாணவர்கள், மாற்று கட்டடத்தில் அமர வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள வளாகத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளதால், அங்கன்வாடி மையத்தை கடந்து செல்ல மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில், கட்டடம் உறுதி தன்மை இழந்துள்ளதால், அதை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!