Load Image
Advertisement

விசுவாசத்தை இடம் மாத்தி காட்டிய அதிகாரிகள்

Tamil News
ADVERTISEMENT
''விசுவாசத்தை, இடம் மாத்தி காட்டுனா உருப்படுமா பா...'' என்றபடியே, 'பட்டர் பிஸ்கட்'டை கடித்தார் அன்வர்பாய்.

''விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க, திருப்பத்துார் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சமீபத்துல, ஆம்பூர்ல கடை கடையா, 'ரெய்டு' நடத்தினாரு...

''பெரும்பாலான கடைகள் பூட்டி கிடந்துச்சு... எப்படியோ, முன்கூட்டியே விஷயத்தை மோப்பம் பிடிச்ச கடைக்காரங்க, 'எஸ்கேப்' ஆயிட்டாங்க பா...
Latest Tamil News
''சோதனையில, 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பிடிபட்டுச்சு... 'கலெக்டர், ரெய்டுக்கு வர்றாரு'ன்னு, கடைக்காரங்களை ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே, 'அலர்ட்' செஞ்சிட்டாங்க பா...

''இப்ப, தகவல் சொன்னவங்க யார்னு தெரிஞ்சிடுச்சு... சீக்கிரத்துலயே அவங்க மேல நடவடிக்கை இருக்கும்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.


வாசகர் கருத்து (3)

  • Nicolthomson - Chikkanayakkanahalli, bengaluru, tumkuru dt,இந்தியா

    என்ன நடவடிக்கை எடுப்பீங்க , பணிநீக்கம் செய்வீர்களா?

  • Godyes - Chennai,இந்தியா

    மக்கள் நலத்தில் அக்கறை கொண்ட திரு.பழனிசாமி அரசு பிளாஸ்டிக் தடை போட்டது காற்றில் பறக்கிறது. ஆட்சிகளை மாற்றும் மூட மக்களால் இப்படி போடப்படும் நல்ல பல திட்டங்கள் பாழாகின்றன.

  • Godyes - Chennai,இந்தியா

    திராவிட பாசறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள். அரசு பணிகளில் ஏராளமான கட்சி விசுவாசிகள் இப்படி இப்பொழுதும் வலம் வருகின்றனர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement