எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம்
திருவள்ளூர்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 - 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்பட்டு வரும் ”எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், விழிப்புணர்வு பரப்புரை வாகன பிரசாரத்தின் துவக்க விழா திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் நடந்தது.
இதில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், வாகன தாமரைப்பாக்கம் கூட்ரோடு மற்றும் ஆவடி பேருந்து நிலையத்தில் முடிக்கப்பட்டது.
இந்த பரப்புரையில் 'எண்ணும் எழுத்தும்' சார்ந்த கருத்துகள் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்து பயன்பெறுமாறு வாகன பிரசாரத்தில் எடுத்து கூறப்பட்டது.
மேலும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வாயிலாக பயனடைந்த மாணவ - மாணவியர் 'என் மேடை என் பேச்சு' என்ற தலைப்பில் உரையாடிய மாணவர்களை கலெக்டர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா, கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!