Load Image
Advertisement

இதே நாளில் அன்று

Tamil News
ADVERTISEMENT
மார்ச் 20, 1921

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மாவேலிக்கராவில், ஜேக்கப் செரியன் -- மேரியம்மா தம்பதிக்கு மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் பி.சி.அலெக்சாண்டர்.

கடந்த, 1948ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான இவர், பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். முன்னாள் பிரதமர் இந்திராவின் நம்பிக்கைக்குரிய தனிச்செயலராக இருந்தார். அவரின் மறைவுக்கு பின், ராஜிவை பிரதமராக்க உறுதுணையாக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்ற இவர், 1989 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வகையில், ராஜிவை அடிக்கடி பிரசாரத்திற்கு அழைத்தார்... என்றாலும், கருணாநிதி முதல்வரானார். பின், மஹாராஷ்டிராவின் கவர்னர், கோவாவின் பொறுப்பு கவர்னராக இருந்தார்.

கடந்த, 2002ல், இவரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கினார், காங்., தலைவர் சோனியா. பல நுால்களை எழுதிய இவர், 2011 ஆகஸ்ட் 10ல், தன், 90வது வயதில் மறைந்தார்.

இந்திரா, ராஜிவின் நம்பிக்கைக்குரிய முன்னாள் கவர்னர் பிறந்த தினம் இன்று!


வாசகர் கருத்து (1)

  • Sundar .,கோவை. -

    மிக சிறப்பான ஊழலற்ற நேர்மையான கவர்னர் ஆட்சியை வழங்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement