ADVERTISEMENT
உடுமலை:'நோயில்லா உடுமலை' இயக்கம் சார்பில், நேற்று, ஜாமியா பள்ளிவாசலில், சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு திட்டத்தின் கீழ், தன்னார்வ அமைப்புகள் சார்பில், மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நேற்று உடுமலை ஜாமியா பள்ளிவாசலில், 'நோயில்லா உடுமலை' தன்னார்வ அமைப்பு சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, நகராட்சித்தலைவர் மத்தீன், ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஹஜரத் அப்துல்லா மற்றும் வார்டு கவுன்சிலர் ஜெயந்தி துவக்கி வைத்தனர்.
முகாமில், இலவச பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை, ஊட்டச்சத்து ஆலோசனை, அவசர முதலுதவி பயிற்சி, போதை பழக்கத்தை கைவிடுவதற்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், ஆரோக்கிய வாழ்க்கை முறை ஆலோசனைகள், நோய்த்தடுப்பு மற்றும் நோய்களை முன்னதாகவே கண்டறிந்து சிகிச்சை அளித்தல் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பல்வேறு தன்னார்வ அமைப்பினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக, தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!