Load Image
Advertisement

நாமே காரணம் ஆயிட்டோமே!

Tamil News
ADVERTISEMENT
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில், பா.ம.க., சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு விழா நடந்தது.

இதில், அக்கட்சி தலைவர் அன்புமணி பேசுகையில்,'கட்சி தலைவர்கள் இறந்தால், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யக் கூடாது என, உயர் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த போது, அவருக்காக இரவோடு இரவாக வழக்கை திரும்ப பெற்றோம்.

'தற்போது கருணாநிதிக்காக, சுற்றுச்சூழலை பாதிக்கும்விதத்தில், கடலில் பேனா சிலை வைப்பது சரியானது அல்ல. அப்படி வைக்க வேண்டும் என்றால், அவரின் சமாதி அருகே வைத்துக் கொள்ளட்டும்' என்றார்.

கட்சி நிர்வாகி ஒருவர், 'அட போங்க தலைவரே... அன்னைக்கே நாம வழக்கை 'வாபஸ்' வாங்காம இருந்திருந்தா, கடலோரம் கருணாநிதி சமாதி அமைஞ்சிருக்காது... இன்னைக்கு கடலில் பேனா சிலை வைக்கிறோம்னு ஆளுங்கட்சியினரும் அடம் பிடிக்க மாட்டாங்க... இப்ப எல்லாத்துக்கும் நாமே காரணம் ஆயிட்டோம்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    காலம் கடந்தபின் வந்த ஞானம்.. இந்த பேச்சுக்கு பலன் வருகின்ற MP எலெஷனில் தெரியும்..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அன்றைய நிலவரம் இடம் கொடுத்ததால் இன்று வாய் திறக்க முடியாத நிலை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement