ADVERTISEMENT
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட பிரித்வி நகர் பகுதியில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த நகரில் மழை நீர் கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் மழை நீர் தேங்கி, அடிக்கடி சாலை சேதமாகிவிடுகிறது.
இதையடுத்து, பிரித்வி நகர் இரண்டாவது பிரதான சாலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
அதே சமயத்தில், முதலாவது பிரதான சாலையில், தார்ச் சாலை அமைக்கப்பட்டது.
அடுத்து வந்த மழைக்காலங்களில், இரண்டாவது பிரதான சாலை அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை தாக்கு பிடித்த நிலையில், முதல் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலை, முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியது.
இரு தினங்களாக கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த மழையால், முதல் பிரதான சாலையில் உள்ள குழிகள் முழுதும், மழை நீர் தேங்கி, குட்டை போல் காட்சியளிக்கிறது.
போக்குவரத்துக்கு லாயக்கற்று போன அந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இரண்டாவது பிரதான சாலையில் அமைத்தது போன்று முதல் பிரதான சாலையிலும், சிமென்ட் சாலை அல்லது 'பேவர் பிளாக்' சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!