ADVERTISEMENT
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதுாரில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான மாரியம்மன் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு ஏற்பட்ட வெடி விபத்தில் இரு அறைகள் தரைமட்டமானது. மேலும் இரு அறைகள் சேதமடைந்தன.
சிவகாசி காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் 52. இவருக்கு நாரணாபுரம்புதுாரில் பட்டாசு ஆலை நடத்துகிறார். நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 52 அறைகள் உள்ளன.
நேற்று முன்தினம் மாலை வழக்கமான பணிகள் முடிந்து பட்டாசு ஆலை பூட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு மருந்து கலவை இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அருகிலேயே முழுமைடையாத பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு தீ பரவியதில் பட்டாசுகள் வெடித்து, இரு அறைகள் தரைமட்டமானது. மேலும் இரு அறைகள் சேதமடைந்தது.
வெடி விபத்தினால் ஆலையை சுற்றி 5 கி.மீ., துாரத்திற்கு சத்தம் கேட்டது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் சிவகாசி தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
ஒரு மணி நேரத்திற்கு பின்பே உள்ளே சென்று தீயணைக்கும் பணியை துவங்க முடிந்தது. இரண்டரை மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அடைத்தனர். ஆலையில் ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்துக்கு காரணம் என்ன
பொதுவாக பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான மருந்து கலவைகளை அன்றே காலி செய்யப்பட வேண்டும். இருப்பு வைக்கக் கூடாது. மறுநாள் பட்டாசு உற்பத்தி பணி துவங்கும் போது புதிதாக மருந்துகள் கொண்டு வர வேண்டும். ஆனால் விபத்து நடந்த ஆலையில் மருந்து கலவைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இது நீர்த்துப் போனதால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் மருந்து கலவை இருப்பு வைத்திருந்தால் அந்த அறைக்குள் பல்லி, எலி போன்ற ஏதேனும் உயிரினங்கள் மருந்தின் மீது விழுந்தாலும் உராய்வு ஏற்பட்டு வெடிக்க வாய்ப்புள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் மருந்து கலவை இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் எலி சென்று உராய்வால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னையில் அதிகாரிகள், ஆலை உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!