விடுமுறை நாளில் கிராம சபை கிராம மக்கள் எதிர்பார்ப்பு
உடுமலை:விடுமுறை நாளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டு தோறும் ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உட்பட முக்கிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கூட்டங்களில், கிராம மக்கள் தங்களுடையை பிரச்னைகளையும், பணிகள் நடைபெறவும், அவற்றை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.
ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், ஒலிப்பெருக்கி வாயிலாக தெரியப்படுத்தியும் தகவல் அளிக்கப்படும்.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுவதில்லை.
இவ்வாறு நடத்தப்படும் இக்கூட்டங்கள், அரசு விடுமுறை நாள் இல்லாமல், வேலை நாட்களில் நடத்தப்படுவதால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் இதில் பங்கேற்க முடிவதில்லை.
இருப்பினும், தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்களை கொண்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்களின் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை.
எனவே, கண்துடைப்புக்காக சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தாமல், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு ஏழு தினங்களுக்கு முன்னரே, தகவல் அறிவிப்பதுடன், விடுமுறை நாளில் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!