ADVERTISEMENT
திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, பழைய திரவுபதியம்மன் கோவில் சாலை செல்கிறது.
இச்சாலையில் வேளாண் தோட்டக்கலை துறை, கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் கால்நடை மருந்தகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு கருவூலம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு ஆகியவை உள்ளன.
மேலும், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இச்சாலையில், அதிகாலை 5:00 மணி முதல், நள்ளிரவு வரை குடியிருப்புகளுக்கு செல்லும் மக்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பயனாளிகள் மற்றும் ஊழியர்கள் என தொடர்ந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சாலையோரம் உள்ள மின் கம்பம் ஒன்று, முறையாக அமைக்கப்படாததால் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த மின் கம்பத்தில் இருந்து தோட்டக்கலை அலுவலகம், தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கம்பம் சா ய்ந்து உள்ளதால் அச்சத்துடன் ஊழியர்கள், மக்கள் சாலையில் கடந்து செல்கின்றனர். எனவே உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாய்ந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்குமாறு பொதுமக்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!