கட்டட கழிவுகளால் பாதிப்பு
உடுமலை கொழுமம் ரயில்வே கேட் அருகே கட்டட கழிவுகளை கொட்டிவைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இக்கழிவுகளை கொட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமசாமி, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் வாகனங்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை. ரோட்டை ஆக்கிரமித்தும், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருட்டு பயம்
உடுமலை, எஸ்.வி.புரத்தில் தெருவிளக்குகள் மாலை நேரங்களில் சரியாக எரியாமல் இருப்பதால், வாகன ஓட்டுனர்களுக்கு சிரமம் அளிக்கிறது. மேலும் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்ல முடியாமல் திருட்டு பயத்தில் உள்ளனர். தெருவிளக்குகள் எரிய மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெய்குமார், கணக்கம்பாளையம்.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, கணக்கம்பாளையத்தில் தெருநாய்கள் பொதுமக்களை கடிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதியாக வீதியில் செல்ல முடியாமல் உள்ளனர். விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
- ராம்குமார், கணக்கம்பாளையம்.
பிளாஸ்டிக் கழிவுகள்
உடுமலை, திருமூர்த்திமலை செல்லும் ரோட்டில் பள்ளபாளையம் பிரிவு அருகே ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. குப்பைக்கழிவுகள் காற்றில் பறந்து ரோட்டில் சிதறிக்கிடக்கிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லட்சுமி, போடிபட்டி.
விபத்து அபாயம்
உடுமலை- பொள்ளாச்சி ரோடு, பஸ் ஸ்டாண்டு அருகே வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விதிமுறை மீறி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. எனவே, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாய்ராம், உடுமலை.
பொதுமக்கள் அவதி
உடுமலை, கொழுமம் பிரிவு ரயில்வே கேட் அருகே குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டமாகவே இருப்பதோடு, வாகன ஓட்டுனர்களும் அவ்வழியாக செல்லும்போது சுவாசிக்க சிரமப்படுகின்றனர்.
- முருகன், உடுமலை.
ரோடு போட வேண்டும்
மைவாடி முதல் கணியூர் வரை செல்லும் ரோட்டில், செங்கண்டிபுதுார் முதல் பவர் கிரீட் வரை தார்சாலை அமைக்கப்படாமல், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
- நடராஜன், உடுமலை.
போலீசார் கவனத்துக்கு
உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில், கனரக வாகனங்கள் விதிமுறை தடுப்புகளை கடந்துசெல்வதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்மேகம், உடுமலை.
ரவுண்டானா அமைக்கணும்
உடுமலை அருகே முக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதில் ஆனைமலை ரோடு சந்திக்கிறது. இதனால், போக்குவரத்து அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு விபத்துகளை தடுக்கவும்,போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
- பாண்டியன், உடுமலை.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!