Load Image
Advertisement

தரிசு நிலங்களில் பழப்பயிர் சாகுபடி செய்து... மாத்தி யோசிங்க!வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விழிப்புணர்வு

உடுமலை:வறட்சியை தாங்கி வளரும், மருத்துவ குணம் மிகுந்த டிராகன் பழம் உள்ளிட்ட பழப்பயிர்கள் சாகுபடி பரப்பை தமிழகத்தில், அதிகரிக்க, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை வாயிலாக, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், மா, வாழை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழப்பயிர்களே அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வறட்சி மற்றும் நீர்பாசனம் இல்லாத பகுதிகளில், பெரும்பாலான விளைநிலங்கள் தரிசாக விடப்படுகிறது.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களிலும், இத்தகைய நிலங்கள் கணிசமான பரப்பில் உள்ளது. இத்தகைய தரிசு நிலங்களிலும், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், மாற்றுத்திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், மாநில தோட்டக்கலைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை., சார்பில், கொடுக்காபுளி, சீமை இலந்தை மற்றும் டிராகன் பழச்சாகுபடியை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, டிராகன் பழப்பயிர், சர்வதேச அளவில், 1.12 லட்சம் ெஹக்டேரில், பயிரிடப்பட்டு, 2.1 மில்லியன் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால், இந்தியாவில், 4 ஆயிரம் ெஹக்டேரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு, உற்பத்தி, 12 ஆயிரம் மெட்ரிக்., டன் அளவுக்கே உள்ளது.

எனவே, வறட்சியை தாங்கி வளர்வதுடன், மருத்துவ குணம் மிக்க, இவ்வகை பழப்பயிர்களை தரிசு நிலங்களில் நடவு செய்து, உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் சிறப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வகை மூன்று சாகுபடிகளும், வறட்சியை தாங்கி வளரும். டிராகன், கள்ளி வகையை சார்ந்திருப்பதால், மிதமான நீர்ப்பாசனம், செய்தால் போதுமானது. அதிக பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. கொடுக்காபுளி வணிக ரீதியில், பயிரிட மிகவும் ஏற்றது.

அவ்வகையில், உடுமலை பகுதி விவசாயிகளிடையே கோவை வேளாண் பல்கலை., பழ அறிவியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும், கொடுக்காபுளி, அதிக வைட்டமின்களை கொண்ட டிராகன் பழம், ஊட்டசத்துகளை கொண்ட சீமை இலந்தை பழங்களுக்கு வியாபார ரீதியாக தேவை அதிகரித்துள்ளது.

எனவே, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இச்சாகுபடிக்கு தேவையான கன்று வினியோகம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகிறது.

டிராகன் சாகுபடி விவசாயிகளுக்கு, பரிந்துரை அடிப்படையில், ெஹக்டேருக்கு, 98 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு, தெரிவித்தனர்.

மருத்துவ குணங்கள்



கொடுக்காபுளி பழங்களில்,நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும், வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. பொட்டாட்சியம் சத்து உள்ளதால், ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.

குறைந்தளவு கிளைசீமிக் இண்டக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட உகந்தது.

இதே போல், டிராகன் பழமும், அதிகளவு வைட்டமின்களையும், தாது உப்புகளையும் கொண்டுள்ளது என கோவை வேளாண் பல்கலை., சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement