ADVERTISEMENT
திருச்சி : கரூர் காகித ஆலைக்கு சவுக்கு கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது, ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியதில், கோவிலுக்கு சென்ற குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தேத்தபாளையத்தைத் சேர்ந்தவர் முத்துசாமி, 58. இவரது மகன் தனபால், 36.
இவர்களின் உறவினர்களான, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம், கோனார்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பழனிசாமி மனைவி ஆனந்தாயி, 57, அவரது மருமகள் சகுந்தலா, 28, அவரது மகள் தவணா ஸ்ரீ, 9.
நாமக்கல் மாவட்டம், உப்புகுளம் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, 43, முருகேசன், 55, இடைப்பாடி அருகே உள்ள பொன்பாளையத்தைச் சேர்ந்த திருமுருகன், 29, ஆகிய எட்டு பேரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதுார் மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, ஆம்னி வேனில் புறப்பட்டனர்.
சேலம் மாவட்டம், சிலுவம்பாளையம், கரட்டுபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 31, வேனை ஓட்டிச் சென்றார்.
நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு திருச்சி மாவட்டம், வாத்தலை அடுத்த திருவாசி பகுதியில், முசிறி மாநில நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது, அரியலுார் மாவட்டம், விளாங்குளத்தில் இருந்து, கரூரில் உள்ள டி.என்.பி.எல்., நிறுவனத்துக்கு சவுக்குக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியது.
இதில், வேன் அப்பளமாக நொறுங்கியது. வேனில் பயணம் செய்த முத்துச்சாமி, ஆனந்தாயி, தவணா ஸ்ரீ, திருமூர்த்தி, முருகேசன் மற்றும் ஆம்னி வேனை ஓட்டி வந்த டிரைவர் சந்தோஷ்குமார் ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சகுந்தலா, தனபால், திருமுருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாத்தலை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்தவர்களின் உடல்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவர்களில் சகுந்தலா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் அரியலுார், சின்னவளையத்தைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமார், 43, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
விபத்து நடந்த இடத்தை திருச்சி எஸ்.பி., சுஜித்குமார் பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
விபத்தில் இறந்த ஆறு பேரின் உடல்களும், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!