ஆட்டோவில் தவறி விழுந்த மீனவர் பலி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பெரியவேடுகுப்பம் கிராமத்தில் வசித்தவர் நடராஜ், 50.
மீனவர். நேற்று முன்தினம், ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து, பெரியவேடுகுப்பம் நோக்கி ஷேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தார்.
ஆரம்பாக்கம், பாரதி நகரில், இறங்கி, ஏறும் போது, தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!