சாலை விரிவாக்க பணி; மக்கள் மகிழ்ச்சி
அன்னூர்:அன்னூர் தென்னம்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யும் பணி ஜரூராக நடக்கிறது.
அன்னூர் நகரில் தென்னம்பாளையம் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை வழியே குமாரபாளையம், சொக்கம்பாளையம், தென்னம்பாளையம், வாகராயம்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு டவுன் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. எனினும், சாலை குறுகலாக இருப்பதால், அன்னூர் மெயின் ரோட்டில் இருந்து தென்னம்பாளையம் சாலைக்கு வாகனங்கள் திரும்பும் போது நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எனவே, தென்னம்பாளையம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் மெயின் ரோட்டில் இருந்து தென்னம்பாளையம் சாலையில் 260 மீட்டர் தூரத்திற்கு சாலையின் மேற்கு பகுதியில் ஐந்து அடி அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணி இரு வாரங்களுக்கு முன் துவங்கியது. தற்போது பணி ஜருராக நடக்கிறது. இத்துடன் நெடுஞ்சாலையை ஒட்டி கழிவுநீர் வடிகால் அமைக்கப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தென்னம்பாளையம் ரோடு மக்கள் கூறுகையில், 'அதிகாரிகள் தென்னம்பாளையம் சாலையில், விரிவாக்கம் செய்து கழிவு நீர் வடிகால் அமைக்கும்போது, மின் கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் ஆகியவற்றை சாலையின் வெளிப்பகுதியில் முடிந்தவரை நகர்த்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்பகுதியில் உள்ள மரத்தையும் அகற்றி வேறு இடத்தில் கூடுதலாக நட வேண்டும். இதே போல் சாலையின் கிழக்குப் பகுதியில் அகலப்படுத்த வேண்டும். இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை இடையூறு இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும்.
அப்போது மட்டுமே நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ததன் பலன் கிடைக்கும். மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், டிரான்ஸ்பார்மரை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலையை அகலப்படுத்தியும் எந்த பயனும் இருக்காது. அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!