ADVERTISEMENT
'எந்த பிரச்னையை வைத்து லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வது...' என, குழப்பம் அடைந்துள்ளார்,மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி.
ஆவேசத்துக்கும்,பரபரப்புக்கும் பெயர் பெற்ற மம்தா பானர்ஜி, சமீப காலமாகவே முடங்கி கிடக்கிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில மூத்த அமைச்சர்களை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை கைது செய்தது,அவரை ரொம்பவே யோசிக்க வைத்து உள்ளது.
சமீபத்தில் நடந்த, சாகர்கிதி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் மம்தாவை கலங்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன்போட்டியிட்ட காங்., வேட்பாளர், திரிணமுல் வேட்பாளரை தோற்கடித்தார்.
இடைத்தேர்தல்கள் என்றால், அவற்றில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், அதையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெற்றது, மம்தாவை பதற்றப்பட வைத்துள்ளது.
அடுத்தாண்டு மத்தியில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள்கைதும், இடைத்தேர்தல் தோல்வியும், அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
'தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லா கட்சிகளும் அதற்கு தயாராகி வருகின்றன. எங்கள் தலைவி மட்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இதிலிருந்து எப்போது அவர் மீண்டு, தேர்தலுக்கு தயாராகப் போகிறார் என தெரியவில்லை...' என கவலைப்படுகின்றனர், மம்தா கட்சியினர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!