Load Image
Advertisement

நீலகிரி நீர் தேக்கங்களில் 2 லட்சம் மீன் குஞ்சுகள்

Tamil News
ADVERTISEMENT
ஊட்டி : நீலகிரி நீர் தேக்கங்களில், 2 லட்சம் மீன் குஞ்சுகள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும், மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் வாயிலாக வருமானத்தை பெருக்க, மத்திய அரசு, 'பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆறுகள், அணைகள், நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளில், 2 லட்சம் மீன் குஞ்சுகளை விட, மாநில மீன் வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜோதிலட்சுமணன் கூறுகையில், ''மலை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு தொழிலை மேம்படுத்தும் வகையில், அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக, 6,000 டிரவுட் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

''தற்போது, பைக்காரா நீர் தேக்கத்தில், 50 ஆயிரம் சாதா கெண்டை, டிரவுட் மீன் குஞ்சு விரலிகள் விடப்பட்டன. கிளன்மார்கன், காந்தள் கால்வாய், தலைக்குந்தா, கவர்னர் சோலை உள்ளிட்ட நீர் தேக்க பகுதிகளில் மொத்தம், 2 லட்சம் மீன் குஞ்சுகள், வரும் நாட்களில் படிப்படியாக விடப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement