ADVERTISEMENT
திருப்பூர் : வேலிக் கற்றாழை நார் வாயிலாக தயாரிக்கப்படும் அலங்காரப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில், கிராம மற்றும் கதர் வாரிய தொழில் கூட்டமைப்பு வாயிலாக, குறு, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கிராம, கதர் வாரிய தொழில் கூட்டமைப்பு சார்பில், திருப்பூரில் மாநில அளவிலான கண்காட்சி நடந்து வருகிறது.
இதில், மகளிர் குழுவினரால் செயல்படும் திருநெல்வேலி, சேரன்மாதேவி தாலுகாவைச் சேர்ந்த சுய தொழில் நிறுவனத்தினர், தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
வேலிக் கற்றாழையில் இருந்து பெறப்படும் நார் வாயிலாக விதவிதமாக பொம்மை தயாரித்துள்ளனர். குளிப்பதற்கு உடலில் தேய்க்க பயன்படுத்தும் நார், கற்றாழையில் இருந்து தயாரிக்கின்றனர். அதில் வெட்டி வேரும் பயன்படுத்துகின்றனர்.
அலங்கார விளக்கு கூம்பு, 'கீ செயின்' உள்ளிட்ட பொருட்களையும் தயாரிக்கின்றனர். இவற்றுடன், வாழை நாரில் இருந்து வித விதமாக கூடைகளும் தயாரித்து, சந்தைப்படுத்துகின்றனர்.
விற்பனை நிறுவனத்தினர் கூறுகையில், 'கற்றாழை நார் வாயிலாக தயாரிக்கப்படும் கை வினைப் பொருட்களை இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
'உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இத்தகைய பொருட்களுக்கு, வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். உள்ளூரிலும் சந்தைப்படுத்தி வருகிறோம்' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!