ADVERTISEMENT
ஆர்.கே.பேட்டை: அகலம் குறைவாக இருந்த தரைப்பாலத்தை விரிவுபடுத்தியும் வாகனஓட்டிகளுக்கு பயனில்லை. விரிவு செய்த பகுதி, பள்ளமாக இருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
ஆர்.கே.பேட்டையில் இருந்து, சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சலையில், வெள்ளாத்துார் ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையின் மீதான தரைப்பாலம், சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தரைப்பாலத்தின் அகலம் அதிகப்படுத்தப்பட்டதால், வாகனங்கள் எளிதாக தரைப்பாலத்தை கடக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாலத்தின் இரண்டு பக்கமும், பள்ளமாக இருக்கிறது. பாலத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கினால், பள்ளத்தில் சிக்கி விபத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
தரைப்பாலத்தில், தார் போடப்பட்டுள்ள பகுதியை ஒட்டி, கான்கிரீட் கொண்டு, சமன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!