ADVERTISEMENT
திருவாலங்காடு: முத்துக்கொண்டாபுரம் கொசஸ்தலையாற்று உயர்மட்ட பாலத்தின் மேல், பெயர் பலகை தலைகீழாக வைக்கப்பட்டுள்ளது.
தக்கோலம் -- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்துள்ளது முத்துக்கொண்டாபுரம்.
இங்கு கொசஸ்தலையாற்று பகுதியில், 2018ல் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் ஆற்றை குறிக்கும் வகையில் கொசஸ்தலையாறு என நெடுஞ்சாலைத் துறையினரால் உயர்மட்ட பாலம் முன் பெயர் பலகை வைக்கப்பட்டது.
இந்த பலகை தலைகீழாக வைக்கப்பட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எல்.கோபாலகிருஷ்ணன், 45, கூறுகையில், ''நெடுஞ்சாலை, பாலம் அமைப்பதோடு சரி பாலத்தில் தன்மையையோ அல்லது சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பது குறித்து ஆய்வு செய்து நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பதில்லை. பெயர் பலகை தலைகீழாக உள்ளதே, அவர்கள் எந்தளவு பணி செய்கின்றனர் என்பதற்கு சாட்சி,'' என்றார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!