Load Image
Advertisement

டவுட் தனபாலு

Tamil News
ADVERTISEMENT
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைப்பாளரான என் சார்பில், பொதுச் செயலர் பதவிக்கு, மனு தாக்கல் செய்யப்படுவதாக தவறான செய்தி வெளியாகி உள்ளது. இது, முற்றிலும் உண்மைக்கு மாறானது.

டவுட் தனபாலு: நீங்க தப்பி தவறி, மனு தாக்கல் செஞ்சாலும், உங்களை முன்மொழியவும், வழிமொழியவும்போதுமான ஆட்கள் உங்க பக்கத்துல இல்லையே... 'ஆட்டம்நம்ம கையை விட்டு போயிடுச்சு' என்ற முடிவுக்கு வந்துட்டீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

பத்திரிகை செய்தி: பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, 2022 மே 28ம் தேதி கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகன் தலைவரான பிறகும், ராமதாஸ், வழக்கம்போல திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கட்சியை நடத்தி வருகிறார். ஒன்றியஅளவிலான நிர்வாகிகளை கூட, அவரே நியமனம் செய்கிறார். இது, அன்புமணியை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

டவுட் தனபாலு: டிரைவர்,'சீட்'ல மகனை உட்கார வச்சிட்டு, 'ஸ்டீயரிங்'கை மட்டும் நான் தான் பிடிப்பேன்னா என்ன அர்த்தம்... 'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்' என்ற திருக்குறள், டாக்டருக்கு நினைவில்லையா என்ற, 'டவுட்' வருதே!

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழக கவர்னரை விமர்சனம் செய்வதற்கு சிறு குழுக்களையும், கூட்டணி கட்சிகளையும் அனுமதிப்பதன் வாயிலாக,தி.மு.க., அரசு மோசமானமுன்னுதாரணத்தை அமைத்துக் கொள்கிறது. தவறாக வழிநடத்துதலில், முதல்வர் ஸ்டாலின் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டவுட் தனபாலு: தேர்தலப்ப சில, 'சீட்'களும், ஜெயிக்கிறதுக்கு பல கோடிகளையும், கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., கொட்டி கொடுத்ததுஎதற்காக... அதெல்லாம், ஆளுங்கட்சிக்கு குடைச்சல் தர்றவங்களை வசைபாட வழங்கப்பட்ட, 'அட்வான்ஸ்' தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!


வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கூட்டணிகள் ஜால்றா தட்டினால்தான் நாடாளுமன்ற சீட் எண்ணிக்கையைக் கூட்டலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement