சாதனை படைத்த மாணவி கவுரவிப்பு
அன்னூர்:தேசிய அளவில் சைக்கிள் போட்டியில் சாதித்த மாணவி கவுரவிக்கப்பட்டார்.
அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில். மாணவியை கவுரவிக்கப்படும் விழா சங்க அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் பேசுகையில், ரோட்டரி சங்கம் சார்பில் பல நூறு கோடி ரூபாய் செலவில், பல நலத் திட்டங்கள் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் சைக்கிள் போட்டியில் சாதனை படைத்த மாணவி தமிழரசிக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் நிதி திரட்டி சைக்கிள் வாங்க உதவி செய்யப்படும், என்றார்.
தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி தமிழரசி மற்றும் சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நேரு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பொகலூர் நடுநிலைப்பள்ளிக்கு கற்பித்தல் உபகரணங்கள் ஆசிரியர் சண்முகத்திடம் வழங்கப்பட்டது.
விழாவில், அன்னூர் ரோட்டரி சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் என்.செந்தில்குமார், பொருளாளர் ஏ. செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!