ADVERTISEMENT
மின் கம்பத்தை சூழ்ந்த கொடிகள்
திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை ஊராட்சியில், மணவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மின் கம்பத்தில் கொடிபடர்ந்து உள்ளது.
கொடிகள் மின் கம்பத்தில் படர்ந்து தற்போது கம்பிகளை சூழ்ந்துள்ளதால் லேசான காற்று வீசினால்கூட மின் தடை ஏற்படும் நிலை உள்ளது.
எனவே மின் கம்பத்தை சூழ்ந்த கொடிகளை அகற்றி சீரமைக்க மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சரத்குமார், பாகசாலை.
பழுதடைந்த மின் கம்பம்
திருத்தணி நகராட்சியில், மேட்டுத் தெரு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், செங்குந்தர் திருமண மண்டபம் எதிரே சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மின் கம்பத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது மின் கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பம் சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
மழையிலும், வெயிலிலும் மின் கம்பத்தில் உள்ள இரும்புகள் துரும்பு பிடித்து எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, மின் வாரிய அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
- -வி.மேனிஷ், திருத்தணி.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!