ADVERTISEMENT
காரமடை:கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட காளம்பாளையம் ஊராட்சி, மருதூர் ஊராட்சி ஆகிய இரு கிராம மக்களுக்கு காரமடை வட்டார சுகாதார மையத்தின் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மருதூர் சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்ற இந்த முகாமில், காரமடை வட்டார சுகாதார மைய மருத்துவர் சுதாகர் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர்.
இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சளி, காய்ச்சல், ஆகிய பரிசோதனைகளும் சித்த மருத்துவம் சார்பில் நிலவேம்பு கசாயம், முதியோருக்கு மூட்டு வலி ஆகியவற்றுக்கான தைலம் வழங்கப்பட்டது.
இரு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து பயன் பெற்றனர்.முகாமை மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் துவக்கி வைத்தார்.
வட்டார சுகாதார மையத்தின் சார்பில் டாக்டர் கிரி சங்கர் சித்த மருத்துவர் ஸ்டெல்லா மேரி, கண் மருத்துவ உதவியாளர் விஜயகுமாரி மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!