ADVERTISEMENT
திருத்தணி: திருத்தணி- - அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகில் 4.60 ஏக்கர் பரப்பில், புதிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், 2019ல் நிலம் ஒதுக்கீடு செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்.8ம் தேதி நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின்கீழ், 12.74 கோடி ரூபாய் மதிப்பில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பங்கேற்று, புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது, பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்றுமுன்தினம், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சிகளின் கூடுதல் தலைமை பொறியாளர் நடராஜன் ஆய்வு செய்தார்.
அப்போது பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகள், பேருந்து நிறுத்துமிடம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் நகராட்சிகளின் மண்டல நிர்வாக பொறியாளர் கருப்பையராஜா, திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் கோபு, நகர அமைப்பு ஆய்வாளர் தயாநிதி பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ், மற்றும் ஒப்பந்ததாரர் தாமோதரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!