Load Image
Advertisement

கூடலூர் நகராட்சியில் ரூ.5.42 கோடி நிலுவை வரி வசூல் குடிநீர் குழாய் துண்டித்து அதிரடி

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி, இந்த ஆண்டு இதுவரை, 5 கோடியே, 42 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் வரி வசூல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவ., மாதம் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளின் வசூல் கணக்கை, தமிழக அரசு ஆய்வு செய்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சிகளில், 50 சதவீதத்துக்கு குறைவான வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் மட்டுமே வசூலாகி இருந்தது.

இதையடுத்து, அனைத்து நகராட்சி ஆணையாளர்களும், வரி வசூல் பணியில் முழுமையாக, தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என, துறை ரீதியான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி, வரி வசூலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இது தொடர்பாக கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, நகராட்சி அலுவலர்கள் மட்டுமல்லாமல், கவுன்சிலர்களையும், அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில், தீவிர வரி வசூலில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வரை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்து வரியாக, 2 கோடியே, 75 லட்சத்து, 74 ஆயிரத்து, 817 ரூபாயும், குடிநீர் கட்டணமாக, 2 கோடியே, 38 லட்சத்து, 34 ஆயிரத்து, 520 ரூபாய் மற்றும் இதர இனங்கள் வாயிலாக வருமானம் என, மொத்தம், 5 கோடியே, 42 லட்சத்து, 27 ஆயிரத்து, 827 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள், வரி இனங்களை வசூல் செய்வதில் முனைப்பு காட்டினர்.

வேண்டுமென்றே குடிநீர் கட்டணங்களை செலுத்த மறுத்தவர்களின், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டன.

அவர்களும் குடிநீர் கட்டணத்தை செலுத்திய உடன் இணைப்புகள் உடனடியாக வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள, 138 நகராட்சிகளில் வரி வசூல் செய்வதில் அதிக முனைப்பு காட்டியதால், தற்போது, 6வது இடத்துக்கு கூடலூர் நகராட்சி முன்னேறி உள்ளது.

இதுவரை, 93 சதவீத வசூல் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. விரைவில், 100 சதவீத இலக்கை பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் அடைவோம் என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement