முகமூடி அணிந்து 90 அலைபேசி திருட்டு; நால்வரிடம் விசாரணை
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அலைபேசி சர்வீஸ் கடையில் முகமூடி அணிந்து வந்து 90 அலைபேசிகளை திருடிய நால்வரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் பென்சனர் தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 37. இவர் அங்கு பழநி ரோட்டில் அலைபேசி சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 90க்கும் மேற்பட்ட அலைபேசிகளை ஒவ்வொன்றாக அவர்கள் கொண்டு வந்த பேக்கில் போட்டு அங்கிருந்து தப்பினர்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது ,அதில் முகமூடி அணிந்து 2 பேர் கடைக்குள் புகுந்து அலைபேசிகளை திருடுவது பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் நால்வரை பிடித்து விசாரிக்கின்றனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!