Load Image
Advertisement

ஏழைகளுக்கு உதவுகிறோம்!

Tamil News
ADVERTISEMENT


ஐந்து மகன்கள், இரண்டு மகள்கள் கொண்ட ஏழைக் குடும்பத்தில் தலைமகனாக பிறந்து, அனைவரையும் படிக்க வைத்து, திருமணமும் செய்து, சவால்களை எதிர்கொண்ட, 'சாவித்ரி பவுண்டேஷன்' நிறுவனர், ஜே.பாலசுப்ரமணியன்: எங்கள் குடும்பம் மிக ஏழ்மையானது. அம்மா சாவித்ரி, ஏழாம் வகுப்பு வரை படித்தவர். அம்மாவின் ஊர் சிதம்பரம். அப்பா ஜெயராமன், பள்ளிஇறுதி வகுப்பு வரை படித்தவர். சாதாரண, 'டைப்பிஸ்ட்'டாக வாழ்க்கையை துவங்கியவர்.

குடும்பம் நடத்துவதே பெரும்பாடு. மாயவரம் அருகில் உள்ள கிராமத்துக்கு என்னையும், என் தம்பியையும் அனுப்பி, உறவினர் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார் அப்பா; அந்த அளவு வறுமை.

சென்னை அண்ணாசாலையில் உள்ள, 'தேவி தியேட்டர்' முதலாளி கோவிந்த ராஜு, எங்கள் ஏழ்மை நிலையை அறிந்து, பள்ளியிறுதி வகுப்பு முடிந்தவுடனேயே, என்னை அவரின் நிறுவனத்தில் வேலைக்கு சேர விருப்பமா என்று கேட்டு, பணியமர்த்திக் கொண்டார்; ஒரு புதிய வாசல் திறந்தது.

அவரது நிறுவனத்தில் முதலாண்டு விடுமுறையில், 'பியூன்' வேலை; அடுத்த ஆண்டு, 'கிளார்க்' வேலை. தொடர்ந்து பி.காம்., கல்வி.

அடுத்ததாக, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' படிப்பு எல்லாவற்றுக்கும், அவரே தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தார். பின், எப்.சி.ஏ., - எல்.எல்.பி., பட்டங்களையும் படித்தேன்.

நாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, அம்மாவுக்கு மூளையில் கட்டி வந்து, 'ஆப்பரேஷன்' செய்ய வேண்டியிருந்தது. மருத்துவச் செலவுக்கு பணமில்லை; மூன்று மாதங்களில் அம்மா இறந்து விட்டார்.

அவர் நினைவாக, 'சாவித்ரி பவுண்டேஷன்' என்ற அமைப்பை உருவாக்கினோம். ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவு, வசதியில்லாதவர்களுக்கு மருத்துவச் செலவு என எங்களால் இயன்ற வரையில் அம்மாவின் நினைவாக உதவிகள் செய்கிறோம்.

ஆதரவற்றோர் பிணங்களை நிறைவு யாத்திரை செய்து அடக்கமும், தகனமும் செய்வதற்காக துவங்கப்பட்ட ஒரு அமைப்புக்கு, 2 லட்சம் ரூபாய் நன்கொடை, 'அடையாறு கேன்சர்' மருத்துவமனைக்கு, 4 லட்சம் ரூபாய் என இப்படி பல விதங்களிலும் சிறு சிறு வழிகளில் உதவுவதை, இந்த பவுண்டேஷன் வழக்கமாக கொண்டு உள்ளது.

தேனா வங்கி, ஐ.டி.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், சி.டி.எஸ்.எல்., உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், டைரக்டராகவும் இருக்கிறேன். இவற்றில் பல பதவிகளை, மத்திய அரசே அழைத்து அளித்தது. தமிழக அரசின், 'கலைமாமணி' விருதும் கிடைத்திருக்கிறது!


வாசகர் கருத்து (3)

  • Ganapathy Subramanyam - Chennai,இந்தியா

    The present practice followed by the Civil Supplies Corporation is that the Ration Card holders should affix their fingerprints in the gadget concerned. In many cases, the fingerprint scanner does not work or there is reportedly some oft-repeated excuse of 'server problem' and as in my own case, (I am now aged 85) the rays in all the fingers of many elderly people have smoothened out, forcing the scanner to reject the prints. While this fingerprint matching is not in vogue even in ATMs and in all the UPI/Bank gateways, involving large monetary transactions, it is not known why the Civil Supplies Dept. is clinging hard to this unwanted practice. Many times, I had to return empty-handed after my fingerprints got rejected by the scanner. When will this practice be abolished to safeguard the interests of the hapless senior citizens? You will help the society in a great way, if you write and publish your own article in your widely read paper, to attract the attention of our government.

  • Ganapathy Subramanyam - Chennai,இந்தியா

    A very poor boy by name VeeraRagavan, whose parents are ironing the garments of the residents in our colony for their livelihood, is studying in the final year of BBA in MGR College, Chennai. Owing to his father's recent illness, the family has spent all their savings. This boy is now desperately in need of money to remit his college fees and finish his final year. Unless we know the contact details of Sri Jayaraman Balasubramaniyan and Savitri Foundation, how to get assistance for the poor boy in need?

  • Ganapathy Subramanyam - Chennai,இந்தியா

    How to contact Sri Jayaraman Balasubramanian? His address, phone number or e mail id are not available anywhere. There is a very poor boy in our colony (Rail Nagar, Koyambedu, Chennai-107 who is studying the Final year BBA degree class. He is very studious but because of his poverty, he is unable to pay his college tution fees and finish his course. He is desperately and urgently in need of help.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement