Load Image
Advertisement

போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் கையாடல்; ஊழியர்கள் 5 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் 1646 கிராம் தங்க நகைகளை அடகு வைத்தது போல ஆவணங்கள் தயாரித்து ரூ.60 லட்சம் கையாடல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி சின்னகடை வீதியில் உள்ள 'இன்டல் மணி லிமிடெட்'டில் பிப்.2ல் நிதிநிலை தணிக்கை நடந்தது. அப்போது 23 வாடிக்கையாளர்கள் பெயரில் 1646 கிராம் தங்க நகைகளை 41 கடன்களாக அடகு வைத்தது போல ஆவணங்களை தயார் செய்து ரூ.60 லட்சம் கையாடல் நடந்தது தெரியவந்தது.

இம்முறைகேடு தொடர்பாக பணியாளர்களிடம் விசாரணையில், எமனேஸ்வரம் ரமேஷ் மனைவி ஜீவஜோதி, பரமக்குடி பாஸ்கரன் மகள் உஷாராணி, மோகன் மகன் பிரசன்னா, பொட்டிதட்டி வீரபாண்டி மகன் தாமோதரன், விருதுநகர் மாவட்டம் இளவனுார் சிவராமன் மகன் ராமர் ஆகியோர் கையாடலில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து ரூ.7 லட்சத்து 89ஆயிரத்தை திருப்பி செலுத்தினர். 5 பேர் மீதும் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement