ரூ.34 லட்சம் கையாடல்; வங்கி மேலாளர் கைது
வேலுார் : வங்கியில், 34 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வங்கி உதவி மேலாளரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில், விருதுநகரைச் சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன், 38, உதவி மேலாளராக பணிபுரிந்தார். அவர், 'ஆன்லைன்' ரம்மி விளையாடியதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்.
இதை சரிகட்ட, வங்கியில் கல்வி கடன் பெற்றவர்கள் செலுத்திய மாத தவணை பணத்தை மோசடி செய்து, 2018 ஜூன், 5 முதல், 2021 ஜூலை வரை, 137 வாடிக்கையாளர்களின், 34 லட்சத்து, 10 ஆயிரத்து, 622 ரூபாயை கையாடல் செய்தது வங்கி நிர்வாகத்துக்கு தெரியவந்தது.
வங்கி மேலாளர் சிவக்குமார் புகாரின்படி, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, யோகேஸ்வர பாண்டியனை நேற்று கைது செய்தனர்.

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!