Load Image
Advertisement

400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு; திருவண்ணாமலையில் பக்தர்கள் அதிர்ச்சி

Tamil News
ADVERTISEMENT
திருவண்ணாமலை, : திருவண்ணாமலையில், 400 ஆண்டு பழமையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் மடத்தை இடித்ததை கண்டித்து, கட்டடத்தின் மீது அமர்ந்து ஹிந்து முன்னணியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அம்மணி அம்மாள். இவர், 17ம் நுாற்றாண்டில் அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு புறம், 108 துாண்களுடன் கூடிய மடம் கட்டி, அங்கேயே தங்கி கோவிலின் வடக்கு கோபுரத்தை பலரின் பொருளுதவியுடன் கட்டினார்.

இதனால் வடக்கு கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என, அழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள், 17ம் நுாற்றாண்டின் இறுதியில், ஈசான்ய லிங்கம் எதிரே ஜீவ சமாதி அடைந்தார்.

அந்த மடத்தை அவரது சீடர்கள் பராமரித்தனர். மடத்தை, 30 ஆண்டுகளாக முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லை. இதனால் சில தனி நபர்கள் ஆக்கிரமித்தனர்.

இதை மீட்க, 1976 முதல், ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் போராடியதால், ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பராமரிக்க உத்தரவிடப்பட்டது. அந்த இடத்தில், 3,800 சதுர அடியில், பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் ஆக்கிரமித்து, வீடு, கார் 'ஷெட்' கட்டியிருந்தார்.

இதை அகற்ற கோவில் நிர்வாகம், திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆக்கிரமிப்பை அகற்றி மடத்தை பாதுகாக்க, மூன்று நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீடு, கார் ஷெட் அகற்றப்பட்ட நிலையில், திடீரென அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது.

மடம், 70 சதவீதம் இடித்த நிலையில், தகவலறிந்த ஹிந்து முன்னணியினர், அம்மணி அம்மாள் பக்தர்கள், அப்பணியை நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை அணுகிய போது, கட்டடம் சேதமடைந்ததால் இடித்ததாக தெரிவித்தனர்.

இதனால் ஹிந்து முன்னணியினர், பாதி இடிக்கப்பட்ட கட்டடம் மீது அமர்ந்து நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி, 400 ஆண்டு பழமையான, நல்ல நிலையில் உள்ள மடத்தை இடித்து, புராதனத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். இதுதொடர்பாக, அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


வாசகர் கருத்து (4)

  • Gopalakrishnan S -

    கொஞ்சம் அஸந்தால் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி இடிப்பார்கள் ! முரசொலி அலுவலகம் நத்தம் இடத்தில் உள்ளது. அதை முதலில் இடிக்கவும்.

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU

      அந்த இடத்தில், 3,800 சதுர அடியில், பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் ஆக்கிரமித்து, வீடு, கார் 'ஷெட்' கட்டியிருந்தார். ...

  • Gopalakrishnan S -

    கொஞ்சம் அஸந்தால் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி இடிப்பார்கள்! முரசொலி அலுவலகம் நத்தம் இடத்தில் உள்ளது. அதை முதலில் இடிக்கவும்.

  • Gopalakrishnan S -

    கொஞ்சம் அஸந்தால் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி இடிப்பார்கள் ! முரசொலி அலுவலகம் நத்தம் இடத்தில் உள்ளது. அதை முதலில் இடிக்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement