Load Image
Advertisement

60 ஆண்டு கால கனவு நனவானது!: அன்னூர் வந்தது அத்திக்கடவு நீர்

Tamil News
ADVERTISEMENT
அன்னுார் : கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு நீர், நேற்று அன்னுார் நீரேற்று நிலையத்திற்கு வந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதிய மழை இல்லாமல், நிலத்தடி நீர் மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது; பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின.

இதற்கு தீர்வாக, பவானி ஆற்று உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளை நிரப்ப, 1,657 கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு -- அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, 2019ல் துவங்கியது; இப்பணி, 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே குன்னத்துாராம்பாளையத்திலும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டம் வாயிலாக, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்; 50 லட்சம் மக்கள் பயன் பெறுவர். ஒரு மாதமாக, ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடும் பணி நடந்து வருகிறது. கடந்த வாரம், ஐந்தாவது நீரேற்று நிலையமான எம்மாம் பூண்டியில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்த நீர், நேற்று மதியம், 1:45 மணிக்கு, அன்னுார் நீரேற்று நிலையத்திற்கு வந்தது. அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர் கவிதா மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், வெள்ளோட்ட பணியை கண்காணித்தனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆர்வலர்கள், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மலர் துாவி வரவேற்றனர்.

திட்ட ஆர்வலர்கள் கூறுகையில், '60 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் பயனாக அத்திக்கடவு நீர், அன்னுார் வந்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

'விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் அதிகரிக்கும். குடிநீர் பிரச்னை தீரும். விரைவில் விடுபட்ட குளங்களுக்கும், அத்திக்கடவு திட்ட நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நேற்று நீரேற்று நிலையத்தில் நிலமட்ட தொட்டி நிரம்பிய பின், அவுட்லெட் வால்வு வழியாக குன்னத்துாராம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் சென்றது.


வாசகர் கருத்து (2)

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    அந்த தண்ணீர் எடப்பாடியை வாழ்த்தும்.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    பரவாயில்லையே? வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement