ADVERTISEMENT
துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மதுராந்தகம், நாகமலை கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், 22, என்பவருக்கும், பெற்றோர் சம்மதத்துடன், 2022 ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
இருவரும், மதுராந்தகத்தில் வசித்து வந்தனர். சரத்குமாரின் தாயாருடன், சிறுமிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், சரத்குமாரும், சிறுமியும், கடந்த 16ம் தேதி, கல்லுக்குட்டையில் உள்ள சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.
ஒரு சில நாட்களில், அழைத்து செல்வதாக கூறிவிட்டு, சரத்குமார் மதுராந்தகம் சென்றார். இந்நிலையில், 17ம் தேதி, பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில், சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், சரத்குமார் மற்றும் அவரது தந்தை வேணு, 55, ஆகியோர் மீது, 'போக்சோ' மற்றும் சிறார் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!